
World Health Day
ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை வழிகாட்டும் விதமாக வேலம்மாள் இணை சுகாதார அறிவியல் கல்லூரியின் “நமது கிரகம் நமது ஆரோக்கியம்” (Our Planet, Our Health) என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக சுகாதார தின ஆரோக்கிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் எஸ்.வி.அனிஷ் சேகர் IAS, மதுரை வடக்கு காவல் துணை அதிகாரி டாக்டர் டி.கே.ராஜசேகர் IPS, மதுரை மாவட்டம் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.பி கார்த்திகேயன் ஐஏஎஸ், டாக்டர் தினேஷ் குமார் MD துணை மாவட்ட மருத்துவ அதிகாரி, வேலம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.வி. முத்துராமலிங்கம், டாக்டர் டி. திருநாவுக்கரசு (Dean), டாக்டர் தாமோதரன் (Medical Superintendent), கல்லூரியின் முதல்வர் ஆர். பிரமிளா விசாகன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பச்சைக் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணி ஆனது தமுக்கம் தமிழன்னை சிலையில் தொடங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் மாணவ மாணவிகள் பேரணியாக நடந்து போதைப்பொருளின் அடிமை மற்றும் நோய்கள் போன்றவற்றை பற்றி வாக்குறுதி அட்டைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “வரும் முன் காப்பதே சிறந்தது” என்ற பொன்மொழிக்கு இணங்க ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்திட விழிப்புணர்ச்சி பேரணி இனிதே நடைபெற்றது.


